பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 156. 137. 138. 139. 140. 141. 142. 143. 144. 136 . இதில் எவை அதிகம் இருக்க வேண்டும்? ஏற்றுமதிகள். இந்நிலை நம் நாட்டிற்குச் சாதகமாகி வருகிறதா? சாதகமாகி வருகிறது. இந்திய ஏற்றுமதியில் எப்பொருள்கள் எவ்வளவு அதிகம்? வேளாண் பொருள்கள் 70%, அந்நியச் செலாவணியில் பெரும் பகுதி இதன் மூலம் கிடைக்கிறது. இந்திய வேளாண்மையின் சிறப்பியல்புகள் யாவை? 1. பயிரிடப்படும் பயிர்களின் எண்ணிக்கையும் வகைக ளும் அதிகம். 2. பணப்பயிர்களைவிட உணவுப் பயிர்களே அதிகம். 3. மொத்த வேளாண் பரப்பில் 75% பரப்பில் உணவுப் பயிர்கள் பயிராகின்றன. இறக்குமதியாகும் பொருள்கள் யாவை? தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தவிரப் போக்குவரத்துக் கருவிகள், பெட்ரோலியம், தார், வேதிப்பொருள்கள், உரங்கள் முதலியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதிகள் செய்யும் நாடுகள் யாவை? அமெரிக்கா, ஜப்பான், ஈரான், ஈராக், ஜெர்மனி, சோவி யத்து ஒன்றியம், சவூதி அரேபியா. அயல்நாட்டு வணிகத்தைப் பெருக்க உள்ள அமைப்பு யாது? நாட்டு வணிகக் கழகம் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மேற்கொள்ள பட்டுவரும் வழிகள் யாவை? 1. உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல். 2. போக்குவரத்துச் கட்டணத்தைக் குறைத்தல். 3. ஏற்றுமதிக்குக் கடன் வசதியளித்தல். 4. கிடங்குகள் அமைத்தல். 5. வரிச் சலுகைகள் அளித்தல். எந்நாடுகளுக்கு நம் பொருள்கள் அனுப்பப்படுகின்றன? அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன். அயல்நாட்டு வணிகம் என்றால் என்ன?