பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. 40. 41. 42. 111 ஒரு பகுதியில் 54 கி.மீ. பரவியது. ஆனால் 1988 இல் வடக்கே அது 96 கி.மீ பின் வாங்கியது. மணல் எல்லாப் பாலைவனங்களிலும் உள்ளனவா? இல்லை. பெரும்பாலான பாலைவனங்களில் பாறைக ளும் கற்களும் உள்ளன. பாலைவனத்தின் மூன்று இயல்புகள் யாவை? வறட்சி, வெப்பநிலை உயர்வு, மழையின்மை. மணல் மேடுகள் எவ்வாறு உண்டாகின்றன? தளர்ச்சியாக உள்ள மணல் காற்று வீசும்பொழுது தரையில் குவிகின்றன. இவையே மணல் மேடுகள். தமிழ் நிலப்பாகுபாட்டில் பாலையின் இடம் என்ன? குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை என நிலம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இறுதியாகக் கருதப்படுவது பாலை. 16. அணைக்கட்டும் பாசனமும் நீரின் இன்றியமையாப் பயன்கள் யாவை? 1. நீர்ப்பாசனம். 2. மின் உற்பத்தி 3. நீர்ப் போக்குவரத்து. 4. குடிநீர். உலகிலுள்ள மொத்த அணைக்கட்டுகள் எத்தனை? 45,000 பெரிய அணைக்கட்டுகள் உலகில் முதல் அணை எப்பொழுது கட்டப்பட்டது? 1890 இல் சீனாவிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை? 22,000. - அமெரிக்காவில் எத்தனை அணைக்கட்டுகள் உள்ளன? 6,390 இந்தியாவில் எத்தனை அணைக்கட்டுகள் உள்ளன? 4,291 (உலகில் 9%)