பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228. 229. 250. 231. 252. 255. 254. 147 1,027,015,247 (2001) இந்தியத் தலைநகர் எது? புதுதில்லி. 9. சூழ்நிலை கெடல் மாசுபடுத்தல் என்றால் என்ன? சூழ்நிலையைப் பாழ்படுத்தல் மாசுபடுத்தல் ஆகும். காற்றில் கரும்புகை கலத்தல், நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் சேர்தல், நிலத்தையும் தாவரங்களையும் அழித்துப் பல வகையில் பாழ்படுத்தல். எவ்வாறு நாம் பல வழிகளில் புவிக்குச் சேதம் விளைவிக் கிறோம்? 1. காற்று, எண்ணெய், நீர் ஆகியவற்றை மாசுபடுத்தல். 2. காடுகளை அழித்தல், காட்டு விலங்குகளைக் கொல் லுதல். 3. இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப்பயன்படுத்தல். ஒரு மணி நேரத்தில் காடுகள் எந்த அளவுக்கு அழிக்கப் படுகிறது? ஒவ்வொரு மணி நேரத்தில் 24 சதுர மீட்டர் பரப்பள வுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்நிலை நீடித்தால் உண்டாகும் பெருந்தீமை யாது? 2050 க்குள் காடுகள் எல்லாம் அழியும். மழை எவ்வாறு அமிலமாகிறது? மழை நீர் அனைத்தும் சிறிது காடித்தன்மை உள்ளது. தொல் படிவ எரிபொருள்களை எந்திரங்களில் எரிக்கும்பொழுது, வேதிப் பொருள்கள் உண்டாகின்றன. இவை காற்றிலுள்ள ஈரத்தை மேலும் காடித்தன்மை யுள்ளவை ஆக்கின்றன. இறுதியாக, இந்த ஈரம் காடிப்பொழிவாகத் தரையில் விழுகிறது. உலகிலுள்ள உயிரினங்களின் (தாவரங்கள் விலங்குகள்) சுமார் 8 மில்லியன் சிறப்பினங்கள்.