பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


2.நுண்ணுயிரி இயல் என்றால் என்ன?

இவ்விரு வகை உயிர்களையும் விரிவாக ஆராயுந்துறை நுண்ணுயிரியல் ஆகும்.


3.குச்சிய இயல் என்றால் என்ன?

குச்சி வடிவ நுண்ணுயிரிகளை ஆராயுந் துறை.


4.குச்சியங்கள் என்பவை யாவை?

குச்சி போன்ற வடிவமுள்ள நுண்ணுயிரிகள். எ-டு. கோலி. இவை ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள்.


5. இவற்றின் மூன்று வடிவங்கள் யாவை?

கோல் வடிவம், சுருள் வடிவம், கோள வடிவம்.

6. குச்சியங்களைக் கண்டறிந்தவர் யார்?

லூயி பாஸ்டர். இவற்றை அவர் நுண்ணுயிரிகள் என்றார்.


7.குச்சியங்கள் ஒட்டுண்ணிகளாக வாழக் காரணம் என்ன?

இவற்றிற்குப் பச்சையம் இல்லை; தங்கள் உணவைத் தாங்ளே தயாரிக்க இயலாது. ஆகவே, பிற உயிர்களை அண்டி வாழ்கின்றன.


8.அராபினோசின் பயன் யாது?

குச்சி வடிவ உயிர் இயலில் வளர்ப்புக் கரைசலில் பயன்படுவது.


9.வளர்ப்பு என்றால் என்ன?

குறிக்கோள் நிலைகளில் செயற்கை ஊடகத்தில் நுண்ணுயிரிகளை வளர்த்தல்.


10.வளர்ப்பு ஊடகம் என்றால் என்ன?

வளர்ப்புக்கரைசல். அகார்-அகார் சேர்ந்த ஊட்டக் கலவை. குச்சி வடிவ உயிர்கள், கோல் வடிவ உயிர்கள் முதலியவற்றை வளர்க்கப் பயன்படுவது.


11. குச்சியங்களால் உண்டாகும் நோய்கள் யாவை?

என்புருக்கி நோய், முறைக்காய்ச்சல், பெரியம்மை, பிளவை, டைபஸ் காய்ச்சல் முதலியவை.


12. குச்சியங்களால் ஏற்படும் நன்மைகள் யாவை?

பால் புளித்துத் தயிராதல், தோசைமாவு புளித்தல், கழிவுகள் சிதைதல் நொதித்தல் முதலிய நல்ல செயல்களும் குச்சியங்களால் நடைபெறுகின்றன.