பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர் முதலியவற்றை ஆய்ந்து நோய்க் குறிகளின் தன்மையை அறிதல்.


4.மருத்துவ மரபியல் என்றால் என்ன?

நோயாளியை நேரடியாக உற்றுநோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயுந்துறை.


5.நோய் என்றால் என்ன?

ஒர் உறுப்பின் இயல்பான அமைப்பு, வேலை ஆகியவற்றில் ஏற்படும் திரிபு. குறிப்பிட்ட அறிகுறிகள் இதற்குண்டு.


6.நோய் வகைகள் யாவை?

1. இடநோய் - குறிப்பிட்ட மண்டலத்தில் உண்டாவது. மலேரியா.

2. கொள்ளை நோய் - உயிர் அழிவை அதிகம் உண்டாக்குவது, காலரா.

3. தொழிலிட நோய் - தூசிநோய்.

4. தொற்றுநோய் - எளிதாகத் தொற்றுவது, சொறிசிரங்கு, அம்மை.

5. மரபுவழிநோய் - சர்க்கரைநோய்.


7.சிறுநோய் என்றால் என்ன?

சிறிய அளவில் தாக்குவது. எ-டு. நீர்க்கொள்ளல்.


8.பெருநோய் என்றால் என்ன?

பெரிய அளவில் தாக்கும் நோய். எ-டு. அம்மை, கொள்ளைநோய்.


9.நலக்கேடு என்றால் என்ன?

உடல் நலம் சிறிது குறைதல்.


10.குறைநோய்கள் என்பவை யாவை?

வைட்டமின்கள் குறைவினால் ஏற்படும் நோய்கள். எ-டு. பெரிபெரி, ஸ்கர்வி, ரிக்கட்ஸ்.


11.தொற்றல் என்றால் என்ன?

இது ஒரு நோய். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவது. சொறிசிரங்கு.


12.தொற்றுநோய்கள் என்றால் என்ன?

காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து