பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


அசிடோதைமிடின் என்னும் மருந்து பயன்படுகிறது. சித்த மருந்துவத்தால் இதைப் போக்கலாம் என்று கூறுகின்றனர்.

59. எயிட்ஸ் விழிப்புணர்வுத்திட்டம் என்றால் என்ன?

புற்றுநோய்போல் பரவும் ஆட்கொல்லி நோய் எயிட்சைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் மேற்கொண்டுள்ள திட்டம்.

60. எச்ஐவி என்றால் என்ன?

மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம் (Human Immuno - Deficiency Virus) எயிட்ஸ் நோயை உண்டாக்குவது, உயிர்க் கொல்லி

61. நேக்கோ என்பது என்ன?

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய நிறுவனம்.

62. என்ஜிஒ என்றால் என்ன?

அரசு சாரா அமைப்பு (Non - Governmental Organization) எயிட்ஸ் நோய் ஒழிப்பு முதலிய சமூகப் பணிகளில் ஈடுபடுவது.

63. தாளம்மை என்றால் என்ன?

காது முன் உமிழ் நீர்ச்சுரப்பிகள் வீங்குவதால் உண்டாகும் நோய் நிலைமை. பண்டுவம் உண்டு.

64. பெரியம்மை என்றால் என்ன?

கடுமையான தொற்று நோய். பெரியம்மை நச்சியத்தினால் உண்டாவது. அதிகக் காய்ச்சல் இருக்கும். கொப்புளங்கள் உண்டாகும். ஒருவாரம் வரை இருக்கும். கொப்புளங்கள் ஆறும்பொழுது வடுக்களாகும். இவற்றிற்கு அம்மை வடுக்கள் என்று பெயர். பொதுவாக, இது ஒருவருக்கு ஒரு தடவைதான் வரும். ஒரு தடவை வந்தபின் தடுப்பாற்றல் தானாகவே உடலில் உண்டாகும்.

65. சின்னம்மை என்றால் என்ன?

ஒரு நச்சிய நோய். முதல் நாள் தோலில் தடிப்பு தோன்றும். அடைகாலம் 10 - 15 நாட்கள். தொற்றுத் தடுப்புக் காலம் 25 நாட்கள்.