பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


பாதுகாப்பாகச் செயல்படுத்தக் கூடிய இசிவு நச்சுமத்தை உருவாக்கியுள்ளது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் இதைச் செலுத்தலாம்.


20.நச்சு எதிர்ப்பி என்றால் என்ன?

நஞ்சை நடுநிலையாக்கும் பொருள். இது ஒர் எதிர்ப்புப் பொருள். நஞ்சுகளை ஊசிமூலம் செலுத்தி, அவற்றினால் உண்டாக்கும் துலங்கலுக்கேற்ப இந்நஞ்சு உண்டாக்கப்படுவது.


21.புரைய எதிர்ப்பிகள் என்றால் என்ன?

உயிர்த் திசுக்களில் நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கும் பொருள். எ-டு டெடால், அயோடின்.


22.புரை எதிர்ப்பு உண்டாக்கல் என்றால் என்ன?

நச்சுயிர் வளர்ச்சியை அழித்தல் அல்லது திசு நோய்த் தொற்றலைத் தடுத்தல்.


23.இம்முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

1880 இல் லார்டு லிஸ்டர், கார்பாலிகக் காடியை முதன் முதலாகப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார்.


24.எதிர்ப்புத் தூண்டி என்றால் என்ன?

சாதக நிலைகளில் உயிர் எதிர்ப்புப் பொருளைத் தூண்டும் புரத மூலக்கூறு. இது ஒரு குறிப்பிட்ட எதிர்த் துலங்கல் ஆகும். குச்சிவடிவ உயிரிகள், நச்சியங்கள் மூலம் உடலுக்கு வருவது. எ-டு டி. வேக் எதிர்ப்புத் தூண்டிகள்.


25.எதிர்ப்பாற்றல் திறன் என்றால் என்ன?

தடுப்பாற்றல் துலங்கலைத் தூண்டுந் திறன்.


26.நச்சு முறிவு என்றால் என்ன?

காடி நஞ்சுக்கு ஒரு மாற்று. எ-டு. இரு கார்பனேட்


27.எதிர்ப்புப் பொருள் என்றால் என்ன?

வெளிப் பொருள் உண்டாக்கும் வினைக்குத் துலங்கலாக உயிரிகளில் உண்டாகும் பாதுகாப்புப் பொருள். இது ஒரு புரத மூலக்கூறே. வெள்ளணுக்கள் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குபவை.