பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


28. உறைவுத் தடுப்பி என்றால் என்ன?

குருதி உறைவைத் தடுக்கும் பொருள். எ-டு கெப்பாரின்.


29. உயிர் எதிர்ப்பு வாழ்வு என்றால் என்ன?

உயிரிகளுக்கிடையே உள்ள இயைபு. அவற்றில் ஒன்றிற்குத் தீங்காக அமைதல்.


30. உயிர் எதிர்ப்பிகள் என்றால் என்ன?

நுண்ணியிரிகளால் உண்டாக்கப்படும் கரிமச் சேர்மத் தொகுதிகள். ஏனைய நுண்ணியிர்கள் செயல்களைத் தடை செய்பவை. எ-டு பெனிசிலின்.


31. அம்மை குத்துதலை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

1796 இல் ஜென்னர் கண்டறிந்தார்.


32. எச்எல்ஏ என்றால் என்ன?

மனித வெள்ளணு எதிர்ப்பி (Human Leucocyte Antigen). மனிதரிடம் இதை அடையாளங் கண்டறிவது உறுப்புப் பதியனுக்கும் நோய்ச்சேர்க்கையை அறியவும் பயன்படும்.


33. புரை உண்டாதல் என்றால் என்ன?

சீழ் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் உடலில் தொற்றி நசிவை ஏற்படுத்துதல்.


34. சைக்ளோஸ்போரின் (F 5061) என்றால் என்ன?

தடுப்பாற்றலை ஒடுக்கும் மருத்துவ வேதிப்பொருள். இதன் கண்டுபிடிப்பு பதியன்கள் தள்ளப்படுவதைத் தவிர்க்க உதவும்.


35. ஆர்எச் காரணி என்றால் என்ன?

வழக்கமாக மனிதக் குருதியில் இருக்கும் எதிர்ப்பிகள். மகப்பேற்றின் பொழுது தீய விளைவுகளை உண்டாக்கும். இக்காரணியைக் கொண்டவர்கள் ஆர்எச் நேரிடையாளர்கள். கொள்ளாதவர்கள் எதிரிடையானவர்கள். இந்தியாவில் 97% நேரிடையானவர்களும் 3% எதிரிடையானவர்களும் உள்ளனர்.


36. தொற்றிகள் என்றால் என்ன?

கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்கு மனிதனுக்குத் தொல்லை தரும் விலங்குகள். இவை தீங்குயிரிகளே.

எ-டு கொசுக்கள்.