பக்கம்:மதன கல்யாணி-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 பற்றியும் மிகவும் புகழ்ந்ததன்றி, அங்கே நடந்த சம்பாஷணையில் வெளியான புதிய விஷயத்தைப் பற்றி அளவிலடங்காத வியப்பும் திகைப்பும் அடைந்து, சிறிது நேரம் வரையில், அது உண்மையாக இருக்குமோ என்பதை நம்பாமலே இருந்தார். பிறகு ஜெமீந்தார் கிழவியின் பக்கம் திரும்பி, "ஏ கிழவி உன்னுடைய பெயரென்ன கருப்பாயியா?" என்று அன்பாக வினவினார். அதுகாறும் மதனகோபாலன் சொன்ன வரலாறுகளை எல்லாம் கேட்டு அவன் தன்னைக் காப்பாற்றியதைப் பற்றி மனங்கொள்ள நன்றியறிதலின் பெருக்கை அடைந்து பொங்கிப் பொறுமியிருந்த கருப்பாயி, "ஆமாங்க எசமானே! எம்பேரு கருப்பாயிதானுங்க, நான் சாதியிலே அம்பட்டச்சி, இந்த நாயெ ஒரு பெரிய மனசியலெ மதிச்சு நீங்கள்ளாம் எனக்குச் சேஞ்ச ஒவகாரத்துக்கு நான் என்ன தான் செய்யப் போறேன்! ஒங்கிளுக்கு மின்னாலே கையெக்கட்டி வாயைப் பொத்திக்கினு நிக்க வேண்டிய புழுக்கைச்சியான நான் இப்பிடிக் குந்தியிருக்கிறது எம்மனசுக்குத் தாளெல்லெ; என்னாலே எந்திரிக்க முடியலிங்க. எசமான் கோவிச்சுக்கக் கூடாது" என்று அந்தரங்கமான நன்றியறிதலோடும், மரியாதையாகவும் உருக்க மாகவும் கூறினாள். முதல் நாள் மாலையில் அவள் பெற்ற அடிகளினாலும் காயங்களினாலும், கைகால்கள் கட்டப்பட்டு நெடுநேரம் கிடந்ததாலும், அலைகளினால் சித்திரவதை செய்யப் பட்டதாலும், அவளது நிலைமை நிரம்பவும் கேவலமாக இருந்த தாகையால், மதனகோபாலனது விஷயத்திலும் ஜெமீந்தாரினது விஷயத்திலும் அவளது மனதில் அபரிமிதமாகப் பொங்கி எழுந்த நன்றியறிதலின் பெருக்கையும், மன நெகிழ்வையும் தாங்க மாட்டாமல், அவள் மயங்கிப் போய் மறுபடியும் படுக்கையில் சாய்ந்து உறங்கி விட்டாள். அதைக் கண்ட ஜெமீந்தாரும் மதனகோபாலனும் அவள் விஷயத்தில் மிகுந்த இரக்கமும் பச்சாத்தாபமும் கொண்டவர்களாய் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது மதனகோபாலன் ஜெமீந்தாரை நோக்கி, "நேற்று சாயுங்காலம் இவள் அந்த மைனரைப் பார்த்து தனக்கும் யாரோ ஒரு குறவனுக்கும் பிறந்த பிள்ளை என்றாளே! அது உண்மையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/31&oldid=853428" இலிருந்து மீள்விக்கப்பட்டது