பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


பேகன் நல் லோனே ; ஈகையில் ஓகை கொண்டோனே ; புலவர் பாடும் பீடு உடையோனே ; அறிவில் சிறந்தோனே ; கல்வியில் கண்ணியமுடையோனே; ஆண்மையில் மேன்மை மேவினோனே என்றாலும், இவன் பால் தீயசெயல் ஒன்று இருந்தது. அதுவே, இவன் கற்புக்கரசியான கண்ணகியைத் தணந்து வேறொரு மாதுடன் இன்புடன் வாழ்ந்து வந்ததாகும். அந்தோ, கண்ணகி என்னும் பெயர் பெற்ற காரிகைமார்கட்கு அமைகின்ற கணவன்மார்கள் எல்லாம் தம் ஆருயிர் அனைய இல்லக் கிழத்தியரை விடுத்துப் பிறமாதரொடு வாழும் பெற்றியினர் போலும்! கண்ணகி யைத் தணந்து மாதவி என்பாளுடன் வாழ்ந்தனன் அல்லனோ கோவலன்! அவனைப் போலவே வையாவிக் கோப் பெரும் பேகனும், கண்ணகியைத் தணந்து வேறொ ருத்தியிடம் வாழலானான்.

இங்ஙனம் தன்னை மறந்து வேறொருத்தியுடன் தன் கணவன் வாழ்க்கை நடத்தினன் என்றாலும். அது குறித்துக் கண்ணகி அவனைத் தூற்றுதல் இன்றி, "எந்நாளேனும் இங்கு வந்து சேருவன்" என்று எண்ணி, ஆறாத் துயருடன் வாழ்ந்து வரலாயினாள். 'குலமகட்குத் தெய்வம் தன்கொழுநனே' என்பது சட்டமேயானாலும், "தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்" என்பது மறைமொழி என்றாலும், தன் கணவன் தகாத ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ளமையின், அவனைத் தக்க வழியில் திருப்புவான் வேண்டி, இறைவனை வந்தித்து வாழ்த்தி வணங்கி வருவாளானாள்.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் அல்லரோ? இவள்பராவி வழிபட்ட கடவுள் இவட்கு நற்காலம் வருமாறு திருவுளங் கொண்டு புலவர் பெருமக்களைத் தூண்டினர். அத்தூண்டுதல் காரண