பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

உடன் இருந்தான் என்றும் வருந்தருகாதையில் இளங்கோவடிகள் கூறியுள்ளார் :

“கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்
எங்நாட் டாங்கன் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாள் அணி வேள்வியுள்”

என்னும் அடிகளில் இவ்உண்மையைக் காண்க. இங்ஙனம் உடன் இருந்து கண்ணகி விழாவைக் கண் குளிரக் கண்ட கயவாகு தன்னாட்டகத்தும் அக்கண்ணகிக்குத் திருத்தளி அமைத்துத் திருவிழாக் கொண்டாடினன் என்பதை இந்நூல் பதிகத்தில் " அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாள்பலி பீடிகை கோட்டமுந், துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என் ஆடித் திங்கள் அகவையின் ஆங்கு ஒர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடா யிற்று” என்று கூறப்பட்டுள்ளது.

இக்கயவாகு இருந்த காலம் சற்றேறக்குறைய 1820 வருடங்களுக்கு முன்பு என்பது இலங்கைச் சரித்திரமாகிய மகாவம்ஸம் என்னும் வரலாற்று நூலால் அறிகிறோம். கயவாகுவுக்கும் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோ அடிகளார்க்கும் தொடர்பு இருந்திருக்கவேண்டும் அன்றோ ? எனவே, இவர் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டே என்பது வெள்ளிடை மலையென விளங்குகிறது.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை த் தவிர்த்து வேறு நூல் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இவர் இந்நூலையும் தாம் துறவு பூண்ட பின்பே யாத்திருப்பதாகத் தெரிகிறது. இவர் யாத்த இச் சிலப்பதிகார கதை இவர் காலத்தின் கதையாகவும் தெரியவருகிறது. இவர் இந்நூலைச்