பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கோட்டத்து அரசு துறந்திருந்தனர்” என வரும் அடிகளில், கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார். அருகதேவன் சமணசமயக் கடவுள். ஆகவே, இளங்கோ அடிகள் சைனசமயத்தைத் தழுவினவராக இருக்கலாம். இந்த ஒரு காரணம் மட்டும் இவர் சைனசமயத்தவர் என்பதை நிலைநாட்ட வல்லது என்று சொல்லுதற்கும் இல்லை. இவர் எழுதியுள்ள சிலப்பதிகாரத்தில் சைனசமயக் கொள்கைகளையும் கருத்துக்களையும் ஆங்காங்கு மிகுத்துச் சொல்லி இருத்தலின், இவர்சைனர் எனச் சாற்ற இடங்தருகிறது. இதனை நாடுகாண் காதையில், 'கண்ணகி நடந்து சொல்லுங்கால் கீழே உள்ள உயிர் இனங்களை மிதிக்கவும் நேரும், ஆகவே அறிந்து நடத்திசெல்ல வேண்டும் எனக் கோவலனிடம் கவுந்தி அடிகள் கூறுவதாக உள்ளவை இளங்கோ சைனசமய சீவகாருண்யக் குறிப்பை உணர்த்தி நிற்கின்றன. ஆகவே, இளங்கோ அடிகள் சைன சமயத்தைத் தழுவியவர் என்பதில் எள்ளவும் ஐயமிலைலே என்க. இதமனைமெய் யெனவே கூறலாம். இதனால், இவர் தம் முன்னோர் மேற்கொண்டவைதிக சமயத்தை இழிவாகக் கருதியவர் என நினைக்க வேண்டா. பிற சமயச் சார்பாகப் பேசும் சமயங் கிடைக்குந்தோறும் சிறப்புறவே செப்புகிறார்; பாடுகிறார். சிவபெருமானுக்கு முதன்மைத்தானமே ஈந்து மொழிகிறார். “நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்” என மொழிகையில் இவ்வுண்மையை உணரலாம். திருமாலைப்பற்றிச் செப்புகையில் "திருமால் சீர்கேளாத்செவியென்ன செவியே” என்று உள்ளங் குளிர உரைத்துள்ளார்.

இனி இளங்கோ அடிகளார் காலத்தைப் பற்றிச் சிறிது சிந்திப்போமாக. இவர் கடைச்சங்க காலத்