பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

நூற்கள் சிலவற்றினையும் ஈண்டுக் குறிப்பிட்டால், உண்மை நன்கு புலனாகும்.

சவ்வாதுப் புலவர் என்பார் அரேபியாவில் இஸ்லாமியர்களுக்குச் சிறந்த யாத்திரைத் தலமாக உள்ள மெதினாமீது ஓர் அந்தாதியும், முஹ்யித்தீன் ஆண்டவர் மீது ஒரு பிள்ளைத்தமிழ் நூலும் பாடியுள்ளார்.இவ்விரு நூற்களே அன்றிச் சில தனிப் பாடல்களும் இவரால் பாடப்பட்டுள்ளன. அவற்றைக் காண விழைவார் தனிப் பாடற்றிரட்டில் கண்டு உணர்வார்களாக. இவற்றினோடு இவர் காலத்துச் சேதுபதி மகாராஜா வைசூரியால் வருந்திய காலத்தில் அவ்வைசூரி நீங்கும் பொருட்டு, இராஜராஜேஸ்வரியை வேண்டி ஒரு நூல் பாடியதாகவும் அறிய வருகின்றது. அதுவே, இராஜ ராஜேஸ்வரி பஞ்ச இரத்தின மாலை என்பது. இதன் பொருட்டு இவர் அம் மகாராஜாவால் சுவாத்தான் என்னும் நிலத்தையும் முற்றூட்டாகப் (வரியிலா நிலமாக) பெற்றதாக உணர்கிறோம்.

முகம்மத் இப்ராஹிம் என்னும் பெயருடைய பெரியாரும் தமிழ்ப் புலமை மிக்கவராய்த் திகழ்ந்துள்ளார். இவர் வண்ணங்கள் பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்தவர். அதன் பொருட்டு இவர் தம் பிள்ளைத் திருநாமமாகிய முகமத் இப்ராஹிம் என்னும் இயற் பெயர் மாறி, வண்ணக் களஞ்சியப் புலவர் என்றே புலவர் பெருமக்களால் புகழப்பட்டு வரலானார். இன்னார் பிறந்த ஊர் மதுரைக்கு அண்மையதான மீசல் என்னும் ஊர் ஆதலின், மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சுட்டப்பட்டும் வந்தனர். பல வண்ணங்களே அன்றி, முஹ்யித்தீன் புராணமும் பாடியுள்ளார். இதனை நாகூர் மகுதியில் அரங்கேற்றம் செய்தனர். அக்காலங்களில் பல தடைகள் எழுந்தன. அவற்றிற் கெல்லாம் தக்க