பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வருந்தவும் கூடும், இந்தத் துயரம் நம்மால் அவருக்கு ஏன் எய்துதல்வேண்டும்? நாம் துறவு பூண்டு வெளியேறின், அரச பாரமும் நம்மை அடையாது. அண்ணன் மனமும் அமைதியுறும்” என்று எண்ணியவராய்த் துறவு நிலையை மேற்கொண்டு வஞ்சிமாநகர்க்குக் கீழ்த்திசைப் பாங்கரில் உள்ள அருகன் கோட்டத்தை அடைந்தனர். இந்த உண்மையை இளங்கோ அடிகளே தம் திருவாய் மலரால் தேவந்தி என்பாள் மீது மருள் ஏறப்பெற்றபோது அவள் கூறுவதுபோலச் ‘செங்குட்டுவன் தன் செல்லல் நீங்கப் பகல் செய்வாயில் படியோர் தம்முன் அகலிடம் பாரம் அகல நீக்கி’ என அறைந்துள்ளார். இங்ஙனம் அரசப் பற்றை அறவேதுறந்து வெளி வந்த பின்பே இவர் ‘அடிகள்’ என்று அழைக்கப்பட்டார் என்க.

இளங்கோ அடிகளார் மேற்கொண்ட சமயம் இன்னதென நாம் அறிதல் வேண்டும் இவருடைய தங்தையான நெடுஞ்சேரலாதன் தன் மூத்த மகனை செங்குட்டுவனைச் சிவபெருமான் அருளால் பெற்றெடுத்தான் என்பதை முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஆகவே, இளங்கோவின் தந்தையார் மேற்கொண்ட சமயம் சைவம் என்பது தெள்ளெனப் புலனாகிறது. இவனது மூத்த மகனான செங்குட்டுவனும் சைவசமயப் பற்றும் சார்பும் உடையவன். இவன் தன் தந்தையார் சிவபெருமானை வணங்கி அப்பிரானது திருவருட் பேற்றால் தோன்றியவன் என்னும் காரணங்கொண்டு அன்று, இவன் சைவ சமயப்பற்றுடையவன் என்பது. இவனது சைவப் பற்று இவன் வடநாட்டுக்குப் புறப்பட்டபோது நிகழ்ந்த நிகழ்ச்சியாலும் அதனை நன்கு உணரலாம். அதாவது, "இவன் வடதிசை நோக்கிப் புறப்படுகையில், முக்கண் மூர்த்தியை முறையாக வணங்கினன். அம்மூர்த்தியின் இணையார் திருவடிகளேத் தன்