பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

93



29. நம்பிக்கை


502. ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உற்சாகம் அளிப்பதாகும்.

ஸ்காட்

503.மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

மார்ட்டின் பூபெர்

504.நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது.

ஷேக்ஸ்பியர்

505.காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.

அக்கம்பிஸ்

506.நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.

கெளலி

507.இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.

ஆவ்பரி