பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

61



செஸ்டர்டன்

316. சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும்.

செஸ்டர்டன்

317.கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும்.

ரஸ்கின்

318.என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல-நம் அறிவுகளேயாகும்.

மான்டெய்ன்

319.ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று, ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை.

ஆவ்பரி

320.நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சுனையை யொப்பான்.

ஆல்ஜெர்

பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே!

டால்ஸ்டாய்