பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

69


கதே


366. அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும்.

கதே

367.ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது; விலங்கு நிலைமையில்—அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில்—வைப்பதேயாகும்.

அர்னால்டு

368.அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்?

ஹக்ஸ்லி


16. அறிவீனம்

369.மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.

ஷேக்ஸ்பியர்

370.தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.

போப்