பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

75



398. ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே

மில்டன்

399.உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.

செம்பிராண்ட்

400. தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.

இப்ஸன்


19. துறவு

401.இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:—அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.

ரஸ்கின்

402.எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.

பார்க்கர்