பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

63


 329. பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.

கார்லைல்

330.அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.

அரிஸ்டோபீனிஸ்

331.அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை.

கார்லைல்

332.ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது — அதுபோல்தான் பண்படாத அறிவையும்.

ஹோம்ஸ்

333.அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.

கதே

334.நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும்.

ஹாமில்டன்