பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

67



353. அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.

ஷேக்ஸ்பியர்


354.'அறியாமை'யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று-நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே. அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று-சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் 'நிறைவு'ம் ஆகும்.

ஸாமுவேல் பெய்லி


355.‘பார்க்க மாட்டோம்’ என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார்.

ஸ்விப்ட்


356.ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே.

ஷாம்பர்ட்

357. கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும்.

செஸ்டர்பீஸ்டு


358.மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே.

ஜே.ஆர்.லவல்