பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

65



342.நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும்.

கெளப்பர்

343.சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? — உன் இஷ்டம்.

ரஸ்கின்

344.மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும்.

ரஸ்கின்

345.அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா?

பிராங்க்லின்

346.தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான்.

டிலட்ஸன்

347.யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது.

ரஸ்கின்