பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அறிவுக்



28. நாகரிகம்

639. ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.

எமர்ஸன்

640.நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர்.

ரஸ்கின்

641.நம்மிடையிலும் இன்னும் நாகரிக தசையடையாத காட்டுமிராண்டிகள் பலர் இருக்கவே செய்கின்றனர்.

ஹாவ்லக் எல்லிஸ்

642. மனிதர் இருதயத்தின் குணாதிசயங்களை எள்ளளவும் மதிப்பதில்லை. அறிவு, உடல்—இரண்டிலொன்றின் ஏற்றத்தையே போற்றுகின்றனர்.

லா புரூயர்

643.ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.

மாஜினி