பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

143



799.எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி.

போப்

800.வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும்.

ஷேக்ஸ்பியர்

801.ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன்.

பிஷப் ஹால்

802.அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.

கோல்ட்ஸ்மித்

803.குதுகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை.

டிக்கன்ஸ்


49. உபகாரம்

804. “உதவி செய்க” என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் “பிரிந்திரு” என்பதே.

ரஸ்கின்