பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

149



838. பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும்.

ஹோம்ஸ்

839. கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே.

ஆவ்பரி

840.மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

ரஸ்கின்

841.எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுத்து, எண்ணை மறத்துக்கும் எழுத்தைக் காமத்துக்கும் உபயோகிக்க விட்டுவிடுவது கல்வி யாகாது. ஆக்கைக்கும் ஆன்மாவுக்கும் பரிபூரணமான பயிற்சி தந்து அவற்றை அடக்கியாளக் கற்பிப்பதே கல்வி.

ரஸ்கின்

842.கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆநந்தமும் உண்டாக்குவதேயாகும்.

ரஸ்கின்