பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் பற்றிய குறிப்புகள்


1. அக்கம்பிஸ் : (1380—1471)
ஜெர்மன் ஞானி; அவர் நூல் பைபிளுக்கு அடுத்த ஸ்தானம் உடையது.
2. அகஸ்டைன் : (384—480)
பிரபல ஆப்ரிக்க கிறிஸ்தவப் பாதிரியார்.
3. அடிஸன் : (1672—1719)
புகழ் வாய்ந்த ஆங்கிலக் கட்டுரை கர்த்தா.
4. அரிஸ்டோபனீஸ் : (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு)
கீர்த்திபெற்ற கிரேக்க நகைச்சுவை நாடகாசிரியர்.
5. அமீல் : (1821—1881) ஸ்விஸ் தத்துவ சாஸ்திரி.

6. ஆர்னால்ட் : (1795—1842)
சிறந்த ஆங்கிலக் கல்வி ஆசிரியர்.
7. ஆவ்பரி : (1834—1913) ஆங்கில அறிஞர், ஆசிரியர்.

8. இப்ஸன் : (1828—1906)
பேர்பெற்ற நார்வீஜிய நாடகாசிரியர்.
9. இர்விங் : (1783—1859)
பிரபல அமெரிக்கக் கட்டுரையாளர்.

10. எபிக்டெட்டஸ் : (கி. பி. 1–ம் நூற்றாண்டு)
கீர்த்திவாய்ந்த ரோமன் தத்துவ சாஸ்திரி, அடிமை.
11. எமர்ஸன் : (1803—1882) அமெரிக்க அறிஞர், கவிஞர்.