இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
- ஓர் உயிர்த் தொகுதியில் குறிப்பிட்ட மரபணு அடிக்கடி தோன்றுதல்.
26. மரபணு நிலையம் என்றால் என்ன?
- டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும்.
27. மரபணு மதிப்பு என்றால் என்ன?
- உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த்தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றுநிலை மரபணு இணைகள் ஓர் இணைமாற்றுக்கு அல்லது மற்றொன்றிற்கு ஓரியல் இணைகளாதல். இது வாய்ப்பாக நிகழ்வது, தேர்வாக் அன்று.
28. மரபுக் கலவை என்றால் என்ன?
- உயிர் அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந்துள்ள மரபுக்காரணிகளின் தொகுமொத்தம்.
29. மரபணுச் சேமகம் என்றால் என்ன?
- ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகுதியின் எல்லா மரபணுக்களின் தொகுமாத்தம்.
30. மரபணுச்சுமப்பி என்றால் என்ன?
- ஒடுங்குமரபணுவைச் சுமந்து செல்லும் உயிரி. எ-டு நிறக்குருடு,
31. மரபுப்புரி (gene+some = genome) என்றால் என்ன?
- ஓர் உயிரியில் அமைந்துள்ள நிறப்புரிகளின் நிறைத் தொகுதி.
32. மனித மரபுப்புரித்திட்டம் எப்பொழுது தொடங்கிற்று? எப்பொழுது இது முடியும்?
- 1988இல் தொடங்கிற்று. 2003இல் முடியும்.
33. நம் உடலில் சற்றேறக் குறைய எத்தனை மரபணுக்கள் உள்ளன?
1 1/2 இலட்சம் மரபணுக்கள் உள்ளன.
34. இதுவரை தெரிந்த தெரியாத மரபணு நோய்கள் யாவை?
- தெரிந்தவை 5000; தெரியாதவை பல.
35. இத்திட்டத்தின் நோக்கம் யாது?
- மனிதநோய்களை ஒழித்து மனிதநலம் பேணுவது ஆகும்.