பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அறிவுநூல் திரட்.ே

12. பொழுதினைச் சுருக்கும் - வாழ் நாளை வீணுகக் குறைக் கின்ற. சிக்கென-இறுக.

13. தெளிவு - இாசம், மானே-பெருமானே. வந்து உறும் ஆறு-வந்தடையும் உபாயம்.

14. எய்த்து - இளைத்து, உன்னை ஒப்பாய் என்றது, இறை வன் தனக்குவமை இல்லாதவன் என்பது பற்றி. உத்தர கோச மங்கை - ஒர் தலம். அத்தன்-தகப்பன்.

15. வீழ் பொருள் - அழிந்து போகும் செல்வம். வென்றி. வெற்றி. நின்ற ஆ சில்லா - கின்றபடி நில்லாத (உறுதியில்லாத) அணவும் - அளாவும்.

16. படிறு-பாவச் செய்கை. கண்ட + ஆ-விரும்பியபடியே திரிதக்தேன் - ஒழுகினேன். தெள்ளியேன் ஆனேன்-(உனது கிரு வருட்பிரசாதம் கிட்டியபின்) ஞான முடையவனனேன். செல் கதி-பரமபதம். கண்ண நீர்-கண்ணிர் இதில், அ-ஆரும் வேற்று மை உருபு, ஈள்ளிருள்-நடு இரவு

17. வெருக் கொள பயப்பட செகுக்க - அழித்த. வம்பு - வாசனை. -

18. சிலம் தாம் செய்யும் - தரைமட்ட மாக்கும் : அதாவது நீக்கும்.

19. மஞ்சு உலாம்-மேகங்கள் உலாவுகின்ற, வண்டு + அறை அறை-ஒலிக்கின்ற, மங்கையார்-திருமங்கை என்னும் நகரிலுள்ள வர்கள். துஞ்சும் போது-இறக்கும் போது (இது மங்கல வழக்கு)

20. அகிலம் - பூமி. ஆன-கட்டளை. அழகேசன்-குபேரன் ாசவாத வித்தை-தாழ்ந்த லோகங்களை உயர்ந்த லோகமாக்கும் வித்தை. காய கற்பம்-உடம்பு நிலை பெற்றிருத்தற் குரிய மருந்து. நான் நான் எனக்குழறி-நாண நான் என்று அகங்காரம் மேலிட்டுப். பொருளின்றிப் பேசி. பாசக்கடல் - ஆசைக்கடல். மனது அற்றமனத்தினுடைய செயலற்ற பரிபூசணம்-முழு நிறைவு.