பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் உல்ப் வான் யூலரி 1929இல் நோபல் பரிசு பெற்றார்.

16. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஹேன்ஸ் வான் யூலர் செல்பின், ஹார்டின் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.

17. மனிதக் குருதி வகைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1930இல் நோபல் பரிசு பெற்றார்.

18. மூச்சு நொதிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வார்பர்க் 1931இல் நோபல் பரிசு பெற்றார்.

நரம்பணு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆண்ட்ரியன் 1932இல் நோபல் பரிசு பெற்றார்.

20. கருவளர்ச்சி அமைப்பி விளைவைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹேன்ஸ் ஸ்பெமன் 1935இல் நோபல் பரிசுபெற்றார்.

21. நரம்புத் துடிப்புகளில் வேதிச்செயல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

ஆட்டோ லோவி, டேல் ஆகிய இருவரும் 1936இல் நோபல் பரிசுபெற்றனர்.

22. நரம்புத் துடிப்புகள் வேதிமுறையில் செயற்படுவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஹென்றி ஹேலப்ட் 1936இல் நோபல் பரிசு பெற்றார்.

23. உயிரியல் கனற்சிச் செயல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

வான் நாகிரியாடோல்ட் 1937இல் நோபல் பரிசுபெற்றார்.

24. வைட்டமின் A1 B2 ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

பால் கேரர் 1937இல் நோபல் பரிசு பெற்றார்.