பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


25. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் வால்டா நார்மன் ஹாவொர்த், பி. பால்ஹேரர் ஆகிய இருவரும் 1937இல் நோபல் பரிசு பெற்றனர்.

26. வைட்டமின் B2 ஐ முதன் முதலில் ஆராய்ந்து நோபல் பரிசு பெற்றவர் யார்?

ரிச்சர்டுசன் 1938இல் நோபல் பரிசு பெற்றார்.

27. ஜி வடிவப் புரதங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1941இல் நோபல் பரிசு பெற்றனர்.

28. வைட்டமின் K இன் வேதித்தன்மையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

எட்வர்டு அடல்பெர்ட் டாய்சி 1943இல் நோபல் பரிசு பெற்றார்.

29. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹென்ரிக் கார்ல் பீட்டர் டேம் 1943இல் நோபல் பரிசு பெற்றார்.

30. ஒரு தனி நரம்பிழையின் வேலை வேறுபாட்டைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஜோசப் எர்லேங்கர் 1944இல் நோபல் பரிசு பெற்றார்.

31. ஒற்றை தரம்பிழைகளின் வேறுபட்ட வேலைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்ற இருவர் யார்?

ஹெர்பர் ஸ்பென்சர் காசர், எல்லிங்கர் ஆகிய இருவரும் 1944இல் நோபல் பரிசு பெற்றனர்.

32. ஊட்ட இயல் வேளாணியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஆர்ட்டுரி இல்மாரி விர்டானன் 1945இல் நோபல் பரிசு பெற்றார்.

33. பெனிசிலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்ற மூவர் யார்?