பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒழுக்கமும் உயர்ந்த பண்பும்
ஒருசிறி தளவும் இன்றி
இழுக்கமோ டாண்டு நூறோ
இன்னுமேல் பற்பல் லாண்டோ
வழுக்கி[1]யே வாழ்வோன் மெய்யாய்
வாழ்பவ னாக மாட்டான்.
ஒழுக்கமோ டொருநாள் வாழ்ந்தோன்
உண்மையாய் வாழ்ந்தோன் ஆவான்.

23


9. தீய நடத்தை இயல்

ஒன்றுதான் ஒன்றே ஒன்றென்(று)
உரைத்துநாம் தீமை செய்யின்,
ஒன்றுநீர்த் துளியும் சொட்டி
உயர்குடம் நிரப்பு தல்போல்
ஒன்றுவொன் றாகத் தீமை
ஒன்றியே மலையாய் மண்டும்
ஒன்றுவொன் றாக தன்மை
உஞற்றலே[2] உறுதி நல்கும்.

24


விள்ளரும்[3] பணம்கைக் கொண்டோன்
வேறொரு துணையும் இல்லோன்
கள்ளரால் திருட்டு நேரும்
கடுவழி செல்லா னாகி
நல்லவர் நடமா டுஞ்சீர்
நல்வழி செல்லு தல்போல்
எள்ளருத் தீமை நீக்கி
ஏத்திடும் அறமே செய்க.

25

9

  1. 31
  2. 32
  3. 33