பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் A 9.

இதனைப் புரிந்து கொண்டால், நாம் தோல்வி யைக்கண்டு தொய்ந்து போக வேண்டிய அவசியமே இல்லை. தோல்வியைத் தைரியமாகவே வரவேற்க லாம். ஏனென்ருல், எதிர்காலத்தில் பெரிய வெற்றி யைப் பெற நம்மை ஆயத்தப்படுத்தி விடுகிற தல்லவா! - சிறந்த செல்வம்

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்கிருர் வள்ளுவர். செவிச் செல்வத்தைக் காட்டி லும் புவியில் குவிந்த செல்வமாக, அடிப்படைச் செல்வமாக விளங்குவது உடல் நலம் தான். செல் வத்தை வேண்டாமென்று மறுப்பவர்கள், வெறுப் பவர்கள் எல்லாம் சித்தப்பிரமை பிடித்தவர்கள் என்று கூறலாம் என்று தோன்றுகின்றதல்லவா!

பசியும் ருசியும்

நல்ல பசிதான் எந்தவிதமான உணவையும் விரும்பி உண்ண வைக்கிறது. அந்த உணவை உடலும் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டு ஜீரணித்து மகிழ்கிறது. அதுபோலவே, ஆர்வத்து டன் விளையாட வருபவர்களிடமே விளையாட்டும் வளர்ந்து கொள்கிறது. உடலும் உள்ளமும் திருப்தி அடைவதுடன், உண்மையான உவகையை, அள விலா ஆனந்தத்தை, இன்பமயமான சூழ்நிலையைக் கொடுத்து, அற்புதமான வாழ்வைச் சுவையுடன் வாழச் செய்து விடுகிறது.

பசிக்கேற்பவே உணவு ருசியை அளிக்கிறது. மகிழ்விக்கிறது. அதுபோலவே, விளையாட்டை