பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52சீவக சிந்தாமணி



என்றால் கூட்டம் இடம் கொள்ளாது. அரசர்கள் ஒரு புறம்: வணிகர்கள் ஒருபுறம், வீரர்கள் ஒரு புறம்; மங்கையர் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம், பின்னணிப் பாடகர் முன்புறம்; இப்படித் தக்க ஏற்பாடுகள் செய்துவிடு. எனக்கு நடு இடம் ஒதுக்கிவிடு; கட்டாயம் வந்துவிடுகிறேன்”

“அவளுக்குக் கண்ட இடத்தில் வெட்டுஅட்டைகள் வைத்து விளம்பரம் செய்யுங்கள்; நான் கையெடுத்துக் கும்பிடுவது போல் எனக்கும் இந்த அட்டைப் படங்களை அமையுங்கள்; வரவேற்பதுபோல இருக்கும்” என்றான்.

“மறுபடியும் வந்து உங்களை அழைக்கிறோம்” என்றான் சீதத்தன்.

“பொறுப்புகள் என்றால் தட்டிக்கழித்து விடுவேன்; இசை விருப்புகள் என்றால் தவறாமல் வந்துவிடுவேன். நம் இசை மண்டபத்தில் முதுமைகளை வைத்து ஆடவைக்காதீர்கள். பதுமைகளை வைக்கவேண்டிய இடம் அது. இசை, பாட்டு, நடனம் இதெல்லாம் எனக்குத் தெரியாது. உருப்படியாக நல்ல உருப்படிகளை அழைத்து விழாக்களை அமைக்கவும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

“தத்தை எப்படிப் பாடினாலும் அத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. பெருங்குடி மக்கள் எல்லாம் முன் வரிசையில் வந்து அமரட்டும்; தலைப்பாகை உள்ளவர்களுக்கு முதலிடம் தரவும்; தலை காய்ந்தவர்களை எல்லாம் பின்னால் தள்ளி விடுங்கள்”.

“சிவந்த இதழை உடைய சீமாட்டிகளுக்கு முன்னிடம் தந்துவிடு; அவர்கள் தோளில் அழகுப் பை தொங்கவிட்டுக் கொண்டு வருவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள். செட்டி விட்டுப் பெண்கள் செட்டாக நககைகள் போட்டுக் கொண்டு வருவார்கள்; அவர்களை மிகவும்