பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

விளையாட்டுச் சிந்தனைகள்


விளங்குகின்ருர்கள் என்று பயந்து கொண்டு பாதி ஆட்டத்தில் ஒதுங்கிப்போவது தற்கொலைக்குச் சம மாகும். தற்கொலை கோழையின் ஆயுதம், கோழையை யார்தான் மதிப்பார்?

இதயத்தில் இமயம்

இளமை தான் எழுச்சியின் இமயம் இமயம் சென்று நிமிர்ந்து கொடி பிடிக்காமல், இதயத்தில் கூனிக் குனிந்து கிடந்தால், பார்ப்பவர் சிரிக்க மாட்டார்களா? விதைக்கும் பொழுது துரங்கிக் கிடப்பவன், அறுக்கும் காலத்தில் அழுது கிடக்க வேண்டியது தான். எதையும் சாதிக்கும் இளமை யில் சோம்பிக் கிடப்பவன், எந்த நாளில் எதை சாதிக்கப் போகிருன்?

புதுமொழி

பாடப் பாட ராகம் - மூட மூட ரோகம் என் பார்கள். இது பழமொழி. இப்போது விளையாட்டுத் துறையில் புதுமொழி ஒன்றைத் தருகிருேம். ஒட ஒட வேகம்-ஆட ஆட யூகம் என்பது தான் அந்தப் புதுமொழி.

லட்சியம்

வாழ்க்கையிலே வெற்றி பெறுவது மட்டுமே லட்சியமல்ல! நீதியுடன் நியாய வழியில் போராடு வதும் கூடத்தான். _