பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

விளையாட்டுச் சிந்தனைகள்


முறையைப் பின்பற்றி, செய்ய நினைத்ததை செய்து முடித்து வெற்றி பெறுகிருன். தவறு செய்யத் தெரியாதவன் தகுதியை அடைய முடிவதில்லை. தவறு செய்து, அதைத் தவிர்த்து விட்டு மீண்டு வருபவனே வெற்றி பெற முடியும். தவறு செய்வது நன்ருக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, தவறையே செய்கிறவன் நிச்சயம் வெற்றி பெறவே முடியாது. அது வீழ்ச்சி பெற வேகமாகக் கொண்டு செல்லும் வாகனமாகி விடும்.

விளையாட்டுக்களில் விளையாடும் நேரத்தில் தவறுகள். அதாவது விதியை மீறும் தவறுகள் செய்ய அநேக வாய்ப்புக்கள் இருக்கின்றன. தவறுகளே செய்கிறவன் சரியான விதியை அறிந்து கொள்ள முடிகிறது. பிறகு தவறைக் கைவிடுவது தானே கற்றவர்க்கழகாகும்!

காட்டுமிராண்டித் தாய்

ஒருவரது உடல் காட்டில் வாழும் காட்டு மிரண்டியினது உடல் போல் இருக்க வேண்டும். வெயில், மழை, பனி, குளிர் எதுவும் அவனது உடலைப் பாதிப்பதுமில்லை. அவன் அதைக் கண்டு பேதலிப்பதுமில்லை. உழைக்க அவன் தயங்குவது மில்லை. மயங்குவதுமில்லை

அதே சமயத்தில் உள்ளமானது ஒரு தாயின் உள்ளம் போல் அமைந்திருக்கவேண்டும். தன்னலம் கருதாது, பிறருக்காக உருகும் பேரன் புத் தளமாக இருக்கின்ற தாயின் உள்ளமாக வைத்துக் கொண் டிருக்க வேண்டும். இப்படி இருக்கும் மனிதன்