பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

விளையாட்டுச் சிந்தனைகள்


மனப் பக்குவம்

பிறரது தவறுகளை மன்னிக்கத் தெரிந்தவன்

மற்றவர்களிடையே மதிப்பினைப் பெறுகிருன். மன்னிக்க மறந்தவன், வெறுப்புக்கு ஆளாகிருன். மன்னிப்பதற்கும் மறப்பதற்கும் மனப் பக்குவம் நிறைய வேண்டும். அத்தகயை மனப் பக்குவத்தை விளையாடும் பொழுது விளையாட்டு வீரர்கள் அதிகமாகவே பெறுகின்ருர்கள். உலகில் பிறந்த அனைவரும் ஆட்டக்காரர்கள் தானே! அப்படி யானுல் வாய்ப்பினைப் பெறுவதற்கு தயக்கம் என்ன? ஆடுகளம் நோக்கிச் செல்லும் லட்சியத்தை நோக்கி நடை போட வேண்டும் என்பது தானே நமது லட்சியம்.

கவர்ச்சியான கடற்கரை

விளையாட்டு வீரர்களின் விளையாட்டு முறை கவர்ச்சியான கடற்கரை போல அமைந்திருக்க வேண்டும். வந்து அமரவும், இதமான காற்றைப் பெறவும், எழிலாக அலை மோதி வரும் அலைகளைக் கண்டு ரசிக்கவும் கூடிய வாய்ப்பினை கடற்கரை தருவது போல, பார்வையாளர்கள் பரவசத் துடன் மகிழ்வடையும்படியாக அவர்கள் ஆட்ட மும் நடப்பும் அமைந்திருக்க வேண்டும். கடற் கரை பாறையாகவும் பயன்படாத இடமாக வும் இருந்தால் எப்படி பழிப்புக்கு இடமாகுமோ, அது போலவே, விளையாட்டு வீரர்களும் அவரது ஆட்டம் மாறிப் போகும் போது பழிக்கப்படு வார்கள்.