பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

விளையாட்டுச் சிந்தனைகள்


வேண்டும். பயன்படா பொருட்கள் உலகில் பாழானவை தான்.

ஒரு குழுவும் சமுதாயமும்

சமுதாயம் செழித்து வளர்வது அதில் வாழும் மனிதர்களின் குணநலம், குளுதிசயங்கள், பண்பாடு களைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. விளையாட் டில் ஒரு குழுவின் பெருமையும் அந்த ஆட்டக் காரர்களின் ஒழுக்கம், பண்பாடு, சீரான நடத்தை இவற்றில் தான் அடங்கிக்கிடக்கிறது. சமுதாயத் தின் ஓர் அங்கமாக விளையாட்டுக் குழு அமையாமல், ஒரு குட்டி சமுதாயமாகவே இருந்து, மனிதனை சிறந்தவகை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக் கிறது.

மலரும் மணமும்

மணத்தால் தான் ஒரு மலர் விரும்பப்படுகிறது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மண மில்லா மலரை மக்கள் வேடிக்கையாகப் பார்ப் பார்கள். ஆனல் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு விளையாட்டு வீரர் அவரது பண்பான செயலால் தான் பாராட்டப் படுகிருர். திறமையால் மட்டு மல்ல. விளையாட்டு வீரர் என்ற மலருக்கு,பண்பாடு என்ற மணம் வேண்டும். திறமை என்ற வண்ணம் மட்டும் இருந்து விட்டால் போதாது. ஒரு மலரானது நிறமும் மணமும் கொண்டிருந்தால் எவ்வாறு மக்களை மயக்குமோ அதுபோலவே, பண்பாடும்