பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

விளையாட்டுச் சிந்தனைகள்


பழமையும் இளமையும்

காலத் தால் பழமையும், தான் கொண்ட கோலத்தால் இளமையும் கொண்டு விளங்குவது விளையாட்டாகும்.

அக்கால மக்கள் விளையாட்டை நம்பினர். ஆர்வமுடன் விளையாடினர். ஆனந்தமான வாழ்க்கையில் இந்த உலகைக் கண்டனர். கொண் டினர் அனுபவித்தனர். நாமும் அவ்வாறு வாழ்ந் தாஸ் இன்னும் நன்ருக வாழலாம். #

மனித இனத்தின் துணை

மனித இனத்துடனே பிறந்து, மனித இனத் துடனே வளர்ந்து, மனித இனத்தையே தொடர்ந்து துணையாகவும், துன்பத்திற்கு அணையாகவும் இருந்து, இன்ப உலகின் ஏற்றமிகு விடிவெள்ளியாய் திகழ் கின்றது விளையாட்டேயாகும்.

உலகம் உணரத் தொடங்கி விட்டது

'மனித இனத்தை வாழ வைக்கின்ற சக்தியும், மனித இனத்தை ஒற்றுமைப்படுத்துகின்ற ஆற்ற லும், மனித இனத்தை நோயினின்றும் சோம்பலி னின்றும் காக்கின்ற வல்லமையும், விளையாட்டுக்களி டம் தான் வீறு கொண்டு விளங்குகின்றன’ என்று உலகம் உணரத் தொடங்கி விட்டது.

இன்று பாரதமும் பாகிஸ்தானும் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறது