பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

14 அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


ஆனால், மருமகனுக்கோ தன் மாமனாரோடு நெருங்கிப் பழகிப் பேசவேண்டும் என்ற ஆவல் உண்டு.

ஒரு விருந்தில், மருமகன், சர்ச்சிலைப் பார்த்து, உலகத்திலேயே பெரிய ராஜதந்திரி எனப் பெயர் பெற்றவர் யார்? என்று கேட்டார்.

அதற்கு சர்ச்சில் உடனே, இத்தாலியின் சர்வாதிகாரி முஸ்ஸோலினி என்று பதில் அளித்தார்.

அதைக் கேட்டதும், விருந்தில் இருந்தோருக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.

“வெறுமனே வேடிக்கைக்காகச் சொல்லுகிறீர்கள். முஸ்ஸோலினி அப்படி என்ன பிரமாத ராஜதந்திரியா? என்று கேட்டார் மருமகன்.

ஆற அமர, சுருட்டுப் புகையை விட்டுக் கொண்டே, சந்தேகம் இல்லாமல். எங்களுக்குள் அவர் ஒருவர் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார். மருமகனைச் சுட்டுத் தள்ளிவிட்டார்! என்றார்.


(13) பெருந்தன்மையாளர்


'மிக உயர்வான கார். அதை ஒட்டி வந்த டிரைவரோ மிகவும் மிடுக்காக இருந்தார். நன்றாக உடை அணிந்து கண்ணியமிக்கவராகத் திகழ்ந்தார்.'