பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

65


"கர்னல் அவர்களே, புதருக்குள் நாஸ்திகரே கிடையாது” என்றார் சார்ஜெண்ட்.



(71) பெரிய சாதனை தான்!



அலெக்ஸாண்டர் டூமாஸ் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் 'மாண்டி கிறிஸ்டோ' என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர்.

அவர் எழுதியுள்ள நூல்கள் ஆயிரத்து இருநூறுக்கு மேல் இருக்குமாம்.

தமக்குக் கீழ் பலரை வைத்துக் கொண்டு, பலவற்றிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கும்படி செய்வாராம் டூமாஸ்.



(72) ங்கள் ந்ததியார் கொடுப்பார்கள்



டாக்டர் பெரன் என்பவர் ஹங்கேரியில் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.

அவர் கேட்கும் தொகையைக் கொடுத்தால்தான், அவர் அறுவை சிகிச்சை செய்வார். அவர் கேட்கும் தொகையோ அதிகம்தான். அவர் வெடுக்கு வெடுக்கென்று பேசக் கூடியவர். உலகில் பெரிய நிபுணர்களுக்கெல்லாம் இந்தக் குணம் இயல்பானது போலும்!