பக்கம்:திருவாசகத்தேன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 183

தேவை. இறைவன் சிவன் உயிர்களுக்கு உய்வு அருளுகின்றான். ஆன்மாக்களாகிய நாம் உய்யுமாறு அறிந்து அவ்வழியிலேயே ஆட்கொள்கிறான். உயிர்களை - ஆன்மாக்களை உய்யுமாறு செய்தல்- உடன்பாட்டு நெறிகளின் வழி சென்று மீட்டெடுத்தலேயாம். இறைவன் சிவனின் ஆட்கொள்ளும் நெறியில் எதிர்மறை அனுகு முறையே இல்லை. ஆங்காரம் உயிரின் இயற்கை. அது எதிர்மறை அணுகுதலை ஏற்காது. ஆதலால் உயிர்களின் மனமறிந்து மனத்துள் இருக்கும் கருத்தறிந்து அக் கருத்தினை முடித்து வைத்தே ஆட்கொண்டருள்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் புறத்தே போனாலும் உடன் வருவான். துரிசுகள் செய்தாலும் உடந்தையாக இருப்பான். முடிவான நிலை ஆட்கொண்டருளுதல்; ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துதல்; இறவா இன்ப அன்பில் திளைத்திடச் செய்தல். உயிர்களை ஆட்கொண்டருளுதலால் ‘பொன்மலர்’ என்று போற்றுகின்றார்.

தைநீராடல் தமிழ் மரபு. காலப்போக்கில் மார்கழி நீராடல் ஆயிற்று. வைகறையில் மார்கழி நீராடல் பழந்தமிழர் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்ந்து வருவது.

வாழ்க்கைப் பொழுதில் வைகறைப் பொழுது நல்ல பொழுது. வைகறைப் பொழுதில் ஆற்றல்மிக்குடைய ஓசோன் உலாப்போதரும். வைகறைப் பொழுதில் சுவாசிக்கும் ஒரு மூச்சு பத்து மூச்சுக்குச் சமம். மூச்சு சுவாசிக்கும் எண்ணிக்கை அடிப்படையில்தான் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. வைகறையில் எழுந்து நடந்து சுவாசித்தால்- ஒரு தடவை சுவாசித்தால் ஒன்பது மூச்சு மிச்சப்படுத்தலாம். அந்த அளவு வாழ்நாள் வளரும். வைகறைப்பொழுதில் நீர் நிலைகளில் ஓசோன் படிந்து அந்தத் தண்ணீர் மிகுதியும் பயன் தரத்தக்க ஆற்றலுடையதாக விளங்கும். அப்போது நீராடல் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், பத்திமைக்கும் மிகுதியும்