பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உத்தராயணம் இல்லை. ஆர்ப்பாட்டத்துடன் சரி. எண்ணெய் கடைச் செட்டியார் சத்தம் போடாத சிரிப்பில் முகம், தோள், தொந்தியெல்லாம் பிசைந்த மாவாய்க் குலுங்குவது போல், தனக்கே உரிய ரகசிய சிரிப்பில் மூட்டம் கலைந்து விட்டது. வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள். புலு புலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன. இருளை இதமாய், நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ ஒரு abstract ஒவியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பகல் கனிந்து பழம் போல் கழுவி இருளின் திறந்த வாய்க்குள் விழப்போகும் ஒரு தினுசான அச்சம்தரும் இசை கேடான முகூர்த்தம். கயிறு மேல், கழைக் கூத்தாடியின் கர்ணத் தருணம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சமயங்கள் ஒருங்குகின்றன. சாமக்ரியைகள் சேர்கின்றன, காத்திருந்த ஒரையும் வருகின்றது, நேர்கிறது, கடக்கிறது. கழிகிறது. இருளும் ஒளியும் கலந்த வேளை, ஆனால், இதோ இரவு தோன்றி விட்டேன் எனும் அந்தக் கலவை நேர்ந்த அந்த அசல் சமயம், அந்த ரஸாயனம், கம் இத்தனை காவலையும் நழுவி விடும் ஜாலம் என்ன? ஆனால், இதெல்லாம் என்ன அசட்டு யோசனை? யாருக்கு என்ன பயன் எனச் செவிட்டில் அறைந்து விளக்குவதுபோல் புறப்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. கண்ணன் Bond box உடன் கிற்கிறான். எப்போ கையில் பெட்டியைத் தூக்கி விட்டானோ இரவு வீடு திரும்பப் போவதில்லை என்று அர்த்தம். பாட்டி வீடோ, மாம்பலத்தில் ரவியோ மூன்றாம் காட்சி பார்த்து விட்டு மிச்சம் போதுக்குத் தலைக்கு அணை, பெட்டியை வைத்துக் கொண்டு ப்ளாட் பாரத்தில் தாங்கினால்-எனக்கென்ன?