பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு உரிய பதினைந்து கதைகள் அடங்கியிருக்கின்றன. இந்தக் கதைகள் புலவர்களுடைய ஆற்றலும், அறிவுடைய பெண்களின் சாமார்த்தியமும், மெய் பேசுதல், தாயினிடம் அன்பு வைத்தல், விடா முயற்சி செய்தல், தர்மம் தலைகாத்தல் முதலிய நீதிகளைப் புலப்படுத்துகின்றன. தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலை அறிந்து விளங்கும் வகையில் சில கதைகள் உள்ளன.

இவை குழந்தைகள் படித்து இன்புறுவதற்கும், முதியோர் கல்வி கற்கும் போது அவர் படித்து மகிழ்வதற்கும் இவை பயன்படும். இந்தக் கதைகளில் சில பல காலமாகத் தமிழ் நாட்டில் வழங்கி வரும் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டவை.

கி.வா.ஜகந்நாதன்