பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு

(சதங்கையின் ஒலி. மேலும் வீணையும் மிருதங்கமும் ஒலிக்கின்றன. சதி மிதிப்பதும் கேட்கிறது.) .

தேவர்களின் குரல் : ஹர ஹர மகாதேவா! என்ன அற்புதம்! எத்தனை ஆனந்தம் இந்தக் காட்சியை என்றும் கண்டதில்லை; எங்கும் கண்டதில்லை.

(ஒலிகள் நிற்கின்றன. சுருதிமாத்திரம் இழைகிறது.)

நடராசப் பெருமான் : காளி, இப்போதாவது உன் தோல்வியை ஒப்புக்கொள்கிறாயா?

காளி : (மெல்லிய குரலில்) பிரபோ, சர்வசக்திமானாகிய தேவரீர் கலைத்தலைவராக இருப்பதை மறந்தது என் பிழை; பொறுத்தருள வேண்டும். தேவரீருடைய ஊர்த்துவ தாண்டவத்தைத் தரிசிக்கும்பேறு அடியா ளுக்குக் கிடைத்தது; பெரிய பாக்கியம். அடியேன் பேதைமையில்லை. நடனத்தில் வாது புரிய முன்வந் தாலும் அதன் விளைவாக இந்த நடனக் காட்சி கிடைத்ததே ! -

தேவர்கள்: சம்போ மகாதேவ! தேவி சொல்வது முக் காலும் உண்மை. இந்த நிகழ்ச்சி நடக்காவிட்டால் எம்பெருமானுடைய ஊர்த்துவதாண்டவ தரிசனம் எம்போலியருக்குக் கிட்டியிருக்குமா ? நாங்கள் செய்த