பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 41.

அணிந்திருந்தார்கள். அதனால் ஏமாந்து போனேன். இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரோ?

ஆண் குரல்: அம்மா, பெரும்பற்றப் புலியூராகிய தில்லையில் நின்று என்னை ஆண்டுகொண்ட சிவ பெருமானுக்குரிய மலையிலே உள்ள சிங்கத்தைப் போன்ற ஒரு கட்டிளங்காளையை நான் கண்டேன்.

செவிலி: கண்டீர்களா? பிறகு.?

ஆடவன் : அந்தக் கட்டிளங்காளைக்குப் பக்கத்தில்...

செவிலி : என்ன தயங்குகிறீர்கள்? சொல்லுங்கள்.

ஆடவன் : எனக்குத் தெரியாது. இதோ இவள் சொல்வாள்.-தூண்டா விளக்குப் போன்ற என் அன்பே, அம்மா சொல்வதைக் கேட்டாயா? என்ன கேட்கிறாள் தெரிகிறதா ?

(மாற்றம்)

குரல் அ; இதோடு பாட்டு முடிகிறது. பாவம்! செவிலி தன் மகள் போனாளா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு நின்றாள். அந்த ஆடவனே. அதைச் சொல்லவில்லை. தன் காதலியைச் சொல் லும்படி குறிப்பித்து விட்டான்.

குரல் ஆ: அப்படி என்றால் ?

குரல் அ: திருவள்ளுவர் சொல்வார்.

வேறு குரல்: (பாடுகிறது.)

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு."

1. குறள், 148.