பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 47 ஊர்வ சர்வா ஊர்வ சர்வா கவலை வேண்டாம், தங்களுக்குரிய நியாயமான பங்கு எங்கும், எதிலும், எப்போதும் உண்டு. என்ன! எப்படி இருக்கிறது நமது இலட்சிய வாண வேடிக்கைகள்? தங்களது அறிவின் செப்பிடு வித்தைகளைச் சீக்கிரமே செய்யுங்கள். ஊர்வசி! இனிமேல் நாம் நமது கொண்டாட்டங் களை எல்லாம் சற்று ஒதுக்கி வைக்க வேண்டும். கடந்த இருபது ஆண்டு காலமாக எந்த இலட்சி யத்திற்காக நாம் பாடுபட்டு இந்நாட்டிலே பெருமுயற்சிகள் செய்து வருகிறோமோ, அந்த இலட்சியம் கைகூடும் காலம் கிட்டிவிட்டது. உள் நாட்டில் நடக்கும் இந்த வறுமைப் போரிலும், குழப்பக் கொந்தளிப்பிலும் இந்த நாட்டை நமதுரிமையாக்கிக் கொள்ளத் தவறிவிட்டால், பின்னால் என்றுமே இயலாமற் போய்விடும். அன்பே இதற்குத்தானா இவ்வளவு சிந்தனை? சமயம் பார்த்து நமது நாட்டுப் படைகளைக் காலருபனின் தலைமையில் இந்த நாட்டின் எல்லையை முற்றுகையிடச் சொல்லுங்கள். இங்கு அவர்களை எதிர்க்கும்படியான வீரர்கள்தான் இல்லையே. வெற்றி நமதே என்பதற்குத் தடை என்ன? அரசன் வீரசிம்மன் என் மந்திரப் பொம்மை செல்வர்களான பெருங்குடி மக்க ளெல்லாம் உமது தாசானுதாசர்கள்! அடியார்க்கு அடியார்கள்! இன்னும் என்ன வேண்டும் நமக்கு?

ஊர்வசி! அரசன் உன் சேவகனாய்த்தான்

இருக்கிறான். பெருங்குடி மக்கள் என் தாசர் களாகத்தான் இருக்கின்றனர். தொண்டர்களுக் கும், குண்டர்களுக்கும் குறைவில்லை. அப்படி இருந்தும், அச்சிறுபயல் சுகதேவன் இந்நாட்டின் தளபதியானதை நம்மால் தடுக்க முடியாமற் போனது மிகவும் வருந்தற்குரிய செய்தி கண்ணே!