பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பறவை தந்த பரிசு

ஓர் ஊரில் கண்ணன் என்று பெயருடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவன் மிக ஏழை அவன் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு பெரிய பூந்தோட்டம் அமைந் திருந்தது. அந்தத் தோட்டத்தைப் பார்த்துக் கொள் வதுதான் கண்ணனுடைய வேலை.

காலையில் எழுந்ததும் பூஞ்செடிகளுக்கெல்லாம் தண்ணிர் ஊற்றுவதும்; பூத்த மலர்களைப் பறித்துச்சென்று வீட்டுக்கார அம்மாவிடம் கொடுப்பதும் தோட்டத்தைப் பெருக்கிக் குப்பை இல்லாமல் அழகாக வைத்துக் கொள்வதும் கண்ணனுடைய அன்றாட வேலையாகும். இதற்கு அந்தப் பணக்காரர் கண்ணனுக்கு மாதம் நூறுரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்.

இந்தச் சம்பளத்தில் கண்ணன் , அவன் மனைவி வள்ளி, அவர்கள் மகள் பொன்னி மூவரும் வாழ்க்கை நடத்த வேண்டும். நாளுக்கு நாள் ஏறிவரும் விலையில் சாப்பாட்டுச் செலவுக்கே வரும்படி போதா