பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54



கண்ணன் மகள் பொன்னிக்கு மாப்பிள்ளை கிடைப்பதற்குள் அவள் கிழவி ஆகி விடுவாள் போலி ருந்தது.

கண்ணன் நாள்தோறும் மயிலைச் சந்திப்பதும், மயில் பண்ணையாரைப் பார்க்கச் சொல்வதும், கண்ணன் வள்ளியிடம் ஏச்சு வாங்குவதும் நடந் ததைத் தவிர எவ்வித முன்னேற்றமும் இல்லை. காலம் கடந்து கொண்டிருந்தது.

ஆடிக் கார்த்திகை வந்தது. மலைக் கோயில் முருகனுக்கு மிகச் சிறப்பாகப் பூசை நடந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் எல்லாரும் மலையில் கூடி விட்டார்கள். திருவிழா வேடிக்கைகள் மிகக் கவர்ச்சியாக நடந்தன. திருவிழாப் பார்ப்பதற்காக கண்ணன் தன் மனைவி வள்ளியையும் மகள் பொன்னியையும் அழைத்துச் சென்றான்.

கூட்டத்தோடு. கூட்டமாக அவர்கள் கோயிலை நோக்கிச் சென்ற போது பொன் னியின் காலில் ஒரு முள் குத்தி விட்டது. அவள் குனிந்து முள்ளை எடுப் பதற்குள் பெற்றோர்கள் மாயமாய் மறைந்து விட்டார் கள். கூட்டத்தில் கலந்து விட்டார்கள். எடுத்த முள் பாதியில் ஒடிந்து ஒரு பாதி காலுக்குள்ளேயே இருந்து விட்டது. ஆகவே அவள் காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் உள்ளே ஒடிந்திருந்த முள், மேலும். மேலும் குத்தி வேதனை தந்தது. எனவே பொன்னி யால் தொடர்ந்து நடக்க முடியவில்லை.