பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

திருந்தான். கண்ணன் முருகன் முன்னால் அப்படியே விழுந்து வணங்கினான். கை நிறையத் திருநீறு அள்ளி நெற்றியில் பூசிக் கொண்டான்,

முருகா, இந்த ஏழையின் குறையைத் தீர்த்து வையப்பா. என் மகள் பொன்னிக்கு அழகான ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும். உன்னைத் தான் மலையைப் போல் நம்பியிருக்கிறேன் என்று கண்ணன் முழுநம்பிக்கையோடு முருகனை வேண்டிக் கொண்டான். ஆயிரக் கணக்கான பக்தர்களின் இலட்சக் கணக்கான வேண்டுதல்களைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த முருகன் கண்ணனின் வேண்டுகோளைக் கேட்ட பிறகும் சிரித்துக் கொண்டிருந்தான்.

கண்ணன், எப்படியும் முருகன் தனக்கு உதவி செம்வான், அருள் புரிவான் என்ற முழுநம்பிக்கை யோடு அந்த மலைக்கு வந்து அடிக்கடி வேண்டுவது வழக்கம். முருகனின் சிரித்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் கண்ணனுக்கு அந்த நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டு வளரும்.

கண்ணன் மகள் பொன்னி வளர வளர கண்ணனின் வேண்டுதலும், முருக பக்தியும் மேலும் மேலும் வளர்ந்தது. தோட்டத்து வேலை இல்லாத நோங் களிலெல்லாம் மலைக்கோவிலுக்குச்செல்வதும்முருகன் முன்னால் வேண்டுவதுமாகத் தன் பொழுதைக் கழித்து வந்தான்.