பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் ஆற்றங்கரை ஓரம் ஒரு சிறு குடில் காலம் : காலை...... (அமைதி சூழ்ந்த ஆற்றங்கரையில் அமைந்த அழகானக் குடில்கள். பின்னணியில் நெடிய மலைகள், வற்றாத ஊற்றுக்கள். தென்றலிலே தவழ்ந்துவரும் தேன் குயில் ஒசை, அடர்ந்த புதர்களின் அருகில் அழகு மயில் நடனம் ஓடைகளில் அன்னங்களின் அழகிய அசைவுகள்! இயற்கை சீரோடும் சிறப்போடும் அமைந்த இடம்) கவிஞர் ஆனந்தன் பாடுகிறார் மாதவநாடும் நல்வாழ்வுறும் நாளென்றோ மானிலமே மகிழ்வுறவே மானிடரின் மாய்கைமாறி - மகா (மாதவர் மாதா மனமிக மகிழ்ந்திட மாட்சிமை மிகுத்திடுமோ அறியேன் சத்தியஜோதியாய் ஜெகமேவீசும் சுடரொளியே ஒளியே ஒளியே சூதால் சூழ்ச்சிகள் சுழல்வது ஓய்ந்திடுமோ சதிசெய்யும் அதமர்கள்வீழ மகா (மாதவ) ஆழியின் அலை எழுந்தணிசெய்யும் ஒலியிசை சூழும் கடலகழியாக - விழைவாய் உலகினர் புகழ்ந்திடும் மலையே உயர் அரணாய் இன்டமே மழையாய், அன்பதே நிலமாய், பண்பதேடபிராய்ச் - சீர்வளமே சேர்ந்துளமே திகழும் அழகமுதமே! கவி : ஒளிமயமான இறைவனே! என்று என் மனத் தெழுந்த கனவுகள் நனவாகும்? என்று என்