பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவியின் கனவு சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : ஏன்? அவர்களும் மனிதர்கள்தானே! மனிதர்கள்தான். ஆனா அந்தக் கைதிங்க உடம்பிலே ரத்தமே இல்லீங்களே. உயிர் இருக்கிறதல்லவா? ஐயையோ, அவங்க உயிர் நமக்கு வேண்டியிருக் குங்களே உயிர் போயிட்டா அவங்க மனசிலே இருக்கிற இரகசியம் போயிடுங்களே! (பெரிதாக சிரித்து, கண்டகர்னா! நீ விவரங் களை வெகு நன்றாகப் புரிந்து கொண்டி ருக்கிறாய். (மீண்டும் கிரித்தல் மீண்டும் சிங்கத்தின் குரல்) சே மிருகம். மனுசனை விட மோசமா இருக்கு: போடறதை எல்லாம் தின்னுட்டு சதா கத்திக் கிட்டே இருக்கு. கவனமுடன் பார்த்துக்கொள். அதிட்டமுள்ள சிங்கம். அடக்கி வை. இந்தக் காட்டுச் சிங்கத்தை நொடியிலே அடக்கிப்புடலாமுங்க! ஆனால் அந்தப் பாட்டுச் சிங்கத்தைக் கூட்டிலே தள்ள முடியல் லீங்களே மகா கவியாம்! மண்ணாங்கட்டியாம். அடாடாடாடா மனுசன் கொஞ்ச நேரங்கூட சும்மா இருக்க மாட்டேங்கிறான் - உம், அவன் இருக்க மாட்டான். ஓ! அந்தக் கவி ஆனந்தனா இன்னுமா அவன் விடுதலைப் பல்லவிப் பாடுகிறான்? ஆமாம் - விடுதலை வந்துவிட்டதுன்னே பாடறான் வீரமாப் பாட்றான் - விடாமல் பாட்றான் - வீடு வீடாப் பாட்றான். வீதி வீதியாய் பாட்றான்! அவன் என்னங்க, அடேங்கப்பா, என்னா பேச்சு பேசறான் என்னா புரட்சி